Thursday, April 24, 2014

பாடகி சின்மயி ‘மையா மையா’, ‘சரசர சாரைக்காற்று’, ‘சகானா சாரல் தூவுதோ’, ’கிளிமாஞ்சாரோ’, ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ உள்பட ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.

சின்மயிக்கும் நடிகர் ராகுல் ரவீந்தருக்கும் காதல் மலர்ந்தது. ராகுல் ரவீந்தர் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு இருவீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து திருமணத் தேதி முடிவாகியுள்ளது.

அடுத்த மாதம் மே 6–ந்தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இவர்கள் திருமணம் நடக்கிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer