Wednesday, April 30, 2014

சென்னை கேளம்பாக்கத்தில் கொல்லப்பட்ட மென்பொருள் பொறியியலாளர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் வேலை பார்த்தவர் உமா மகேஸ்வரி.

இவர் கடந்த பிப்ரவரி மாதம் 13ம் திகதி கடத்திச் செல்லப்பட்டு அங்குள்ள காட்டு பகுதியில் வைத்து கற்பழிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் கேளம்பாக்கம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு உமா மகேஸ்வரியை தீர்த்துக்கட்டியதாக, கொலை நடந்த பகுதியில் கட்டிட வேலை பார்த்த மேற்கு வங்காள மாநில தொழிலாளிகள் 3 பேரை கைது செய்தனர்.

கொலையாளிகள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சி.பி.சி.ஐ.டி. பொலிசார் விசாரணையை முடித்து விட்டனர்.

விசாரணை முடிந்த நிலையில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் 850 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த குற்றப்பத்திரிகையில், உமா மகேஸ்வரி கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விரைவில் இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer