Tuesday, April 22, 2014

கோவில் திருவிழாவால் தேர்தல் பிரசாரம் தடைப்பட்டதால் நடிகை மும்தாஜை காண முடியாமல் பள்ளிப்பட்டு பகுதி மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவை சேர்ந்த பகுதிகளில் அரக்கோணம் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகை மும்தாஜ் பிரசாரம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நடிகை மும்தாஜ் அரக்கோணம் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.அப்போது மும்தாஜை காண மக்கள் பெரும் கூட்டமாக திரண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், அத்திமாஞ்சேரிப்பேட்டையில் கோவில் திருவிழா நடைபெறுவதால் நீங்கள் அங்கு சென்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு பிரசாரம் செய்வது தடைபடும் என்று பொலிசார் அவரை தடுத்துள்ளனர்.

மேலும், நீங்கள் அங்கு சென்று ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறியுள்ளனர்.

இதையடுத்து மும்தாஜ் தனது பிரசாரத்தை வங்கனூரில் முடித்து கொண்டு திருத்தணிக்கு சென்றுள்ளார்.

இதனால் மும்தாஜை காண பள்ளிப்பட்டு பகுதியில் காத்திருந்த திரளான ரசிகர்கள் அவரை காண முடியாமல் பெரிது ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer