Monday, April 28, 2014

தன் படத்திற்கு இப்படியொரு சிக்கல் வரும் என்று மணிரத்னம் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். பிலிம் இல்லாமல் கூட படம் எடுத்துவிடுவார்.

(இப்பல்லாம் ஏதுய்யா பிலிம்? டிஜிட்டல்தானே என்பவர்கள் இந்த வழக்கு மற்றும் பழக்கு வார்த்தையை பொருத்துக் கொள்ளவும்) ஆனால் ஐஸ்வர்யா இல்லாமல் அவர் படமே எடுக்க மாட்டார். எப்போது இந்த முடிவுக்கு வந்தாரோ, அப்போதிலிருந்தே அவர் படங்கள் பட சொதப்பல் ரகத்தில் இணைந்துவிட்டது. அதுவேறு விஷயம். சரி, மேட்டருக்கு வருவோம்.

ஐஸ்வர்யா ராய் பச்சன் கர்ப்பமாக இருக்கிறாராம். அவருக்கு ஏற்கனவே மூன்று வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. குழந்தைக்குபின் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த ஐஸ், மீண்டும் சினிமாவில் நடிக்க நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். வழக்கம் போல மணிரத்னத்திடமிருந்து அழைப்பு வர, அமிதாப் குடும்பமும் இந்த படத்தில் நடிக்க சம்மதித்திருந்தது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்கும் ஜோடியாக ஐஸ் நடிப்பார் என்று கூறப்பட்டது. இப்படத்தில் மகேஷ்பாபுவும் ஒரு ஹீரோவாக நடிக்கிறார். படம் இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் வெளியாகும் என்றெல்லாம் பேசப்பட்டது.

இந்த நேரத்தில்தான் ஐஸ் கர்பமாகிவிட்டார். நாகார்ஜுனா போன்ற பெரிய ஹீரோக்கள் நடிக்க சம்மதிப்பதே ஐஸ் போன்ற அட்ராக்ஷனால்தான். இந்த நிலையில் இப்படியொரு அதிர்ச்சி வந்து சேர, குழப்பத்திலிருக்கிறாராம் மணி. ஐஸ் இடத்தை நிரப்ப யாரால் முடியும்?

0 comments :

Post a Comment

 
Toggle Footer