Wednesday, April 30, 2014

இன்று “அஞ்சான்” படத்தின் எழுத்து வடிவம் வெளி வந்துள்ளது.

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் தான் “அஞ்சான்”.

படத்தின் “ஃபர்ஸ்ட் லுக்” மே 1ம் திகதி வெளி வரும் என தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டது.

ஆனால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இன்று டைட்டிலின் எழுத்து வடிவம் வந்துள்ளது, இதுவும் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்று வருகிறது.

இப்போது அதுவல்ல விஷயம்.”அஞ்சான்” படத்தின் டைட்டில் வடிவம், தனுஷ் நடிப்பில் வெளி வர இருக்கும் “அனேகன்” படத்தின் டைட்டில் வடிவமும் ஒரே மாதிரியாக உள்ளது என்பது தான்.

“அனேகன்” படத்தின் டைட்டில் வடிவம் சில மாதங்களுக்கு முன்பே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1 comments :

 
Toggle Footer