Monday, April 28, 2014

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறோம் என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு கடந்த 13ம் திகதி தேர்தல் பிரசாரத்துக்கு மோடி வந்தபோது நடிகர் ரஜினிகாந்தை வீட்டுக்கு சென்று நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோடி தன்னை சந்தித்தது பற்றி ரஜினிகாந்த் கூறுகையில், மோடி எனது நெருங்கிய நண்பர், அந்த வகையில் என்னை சந்தித்தார் என்று கூறினார்.

இந்நிலையில், ரஜினிகாந்தின் மனைவி லதா பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், ரஜினி-மோடி சந்திப்பு குறித்து கேட்டபோது, நரேந்திரமோடி ரஜினியின் மிக நெருங்கிய நண்பர், ரஜினிகாந்த் உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது மோடி மருத்துவமனைக்கு நேரில் வந்து பார்த்தார்.

இப்போது அவர் எங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து எங்களை சந்தித்து உள்ளார். இதனால் நாங்கள் அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறோம்.

மேலும், அவர் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை கவுரவபடுத்தி விட்டார் என்று கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer