Friday, April 25, 2014

‘படத்தை சீக்கிரம் முடிங்க’ என்று பாண்டிராஜை நயன்தாரா விரட்டுகிறார் என்ற செய்தியை தொடர்ந்து இன்னொரு செய்தி.

பாண்டிராஜும் இந்த படத்தை நம்பினால் நம்ம கதை அம்பேல்தான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். சின்னப்பசங்களை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார். (பசங்க-2?) இந்த படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடித்தால் பொறுத்தமாக இருக்கும் என்று முடிவு செய்தவர், ஜோதிகா வீட்டு கதவை தட்ட... முதலில் கதை கேட்க சம்மதித்தாராம் அவர். (சூர்யாவின் ஒப்புதலோடுதான்) பளிச்சென மனசில் ஒட்டிக் கொள்கிற மாதிரியான கதையாம். உடனே சூர்யாவின் க்ரீன் சிக்னலுடன் நடிக்கவும் சம்மதித்திருக்கிறார். விரைவில் படம் துவங்கப் படலாம்.

சிம்புவின் சோம்பேறித்தனத்தால் யாருக்கெல்லாம் லாபம் பாருங்கள்... அதிருக்கட்டும். ஜோதிகா மீண்டும் நடிக்க வருவது ஹரி படத்தில்தான் என்றொரு செய்தி முன்பே கசிந்தது. அதில் சூர்யாவுக்கு ஜோடியாகவே நடிக்கப் போகிறார் அவர். இந்த நேரத்தில் பாண்டிராஜ் படத்தில் ஜோதிகா நடிக்க சம்மதித்திருப்பதால் ஹரி படத்திற்கு முன்பாகவே ஜோதிகாவுக்கு ரீ என்ட்ரி கொடுப்பவர் பாண்டிராஜ் என்ற பெருமைக்கு ஆளாகப் போகிறார் அவர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer