Thursday, April 24, 2014

நடிகர் ஜெய் இஸ்லாமியராக மாறிவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்திருக்கிறது. அதை உறுதி செய்வதை போல

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் தேனாம்பேட்டையில் அமைந்திருக்கும் மசூதி ஒன்றில் நமாஸ் செய்ய வந்துவிடுகிறார். அதுமட்டுமல்ல, ரம்ஜான் நேரத்தில் முறைப்படி நோன்பும் இருந்தாராம்.

இவ்வளவு வெளிப்படையாக அவர் இஸ்லாத்தை நேசித்தாலும், குடும்பத்தில் பெரிய சிக்கல். மதம் மாறக் கூடாது என்று மல்லுக்கு நிற்கிறதாம் ஜெய்யின் குடும்பம். இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் மகன்தான் ஜெய். மேல்மருவத்துர் பங்காரு அடிகளாரை வணங்குகிற குடும்பமாச்சே, விடுவார்களா? இருந்தாலும் பேசி கரைத்துக் கொண்டிருக்கிறார் ஜெய். அவர் கரைப்பது அப்பா அம்மாவை மட்டுமல்ல, தனது திரையுலக நண்பர்களையுமாம்.

இவருடைய பக்தி மார்க்கத்தை நாட மேலும் சில ஹீரோக்களும் வரக் கூடும் என்கிறது இப்போதைய தகவல்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer