Tuesday, April 22, 2014

நடிகை நக்மா, ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாத தலைவரான சையத் அலி ஷா கிலானியை பாரத ரத்னா விருது பெற்றவர் எனக் குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி, ராய்ப்பூரில் காங்கிரஸ் வேட்பாளர் காஸிம் அலி கானை ஆதரித்து நக்மா பேசுகையில், மோடியைப் பிடிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விடுங்கள் என பாஜகவின் கிரிராஜ் கூறியுள்ளார்.

மேலும், சையத் அலி ஷா கிலானிக்கும் மோடியைப் பிடிக்கவில்லை. அவர் பாரத ரத்னா விருது பெற்றவர், அவரையும் பாகிஸ்தானுக்கு அனுப்பி விட வேண்டுமா?

பதவிக்கு வருவதற்கு முன்னரே இப்படிப் பேசுபவர்கள், பதவிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார்கள்? என்று பேசியுள்ளார்.

இந்நிலையில், சையத் அலி ஷா பாரத ரத்னா விருது பெற்றவர் என நக்மா குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer