Tuesday, April 29, 2014

லண்டனில் மனைவி ஒருவர் தனது அன்புக்கணவரை காப்பாற்றிவிட்டு அவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஆஸ்கர் சில்வா, சோபி ரோசர் என்ற இளம் வயது தம்பதியர் வசித்து வந்தனர்.

ஒரு நாள் இரவு, சோபி மட்டும் பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுவிட்டு இரவு 1 மணியளவில் வீடு திரும்பிய போது, அந்த குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனைப் பார்த்த சோபி, ஐந்தாவது மாடியில் தூங்கி கொண்டிருக்கும் தனது கணவனை காப்பாற்றுவதற்காக விரைவாக 4வது மாடிக்கு சென்று கைப்பேசியின் வாயிலாக தகவலை தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்ட கணவரும் 5வது மாடியை விட்டு தப்பித்து சென்றுள்ளார். ஆனால் இதில் பரிதாபத்திற்குரிய விடயம் என்னவெனில் சோபி தன் கணவனுடன் பேசிக்கொண்டிருக்கையில், 4வது மாடியில் தீ முற்றிலுமாக பரவியதில் சோபி பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் கணவர் வேகமாக 4வது மாடிக்கு வந்து பார்க்கையில், தீயினால் வெந்த சோபியின் சரீரத்தை, தீயணைப்பு படையினர் அவசர ஊர்தி மூலமாக மருத்துவமனைக்கு கொன்டு சென்றனர், கூடவே ஆஸ்கரும் சென்றுள்ளார்.

தனது மனைவியின் உயிரிழப்பை எண்ணி ஆஸ்கர் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer