Monday, April 28, 2014

சிதம்பரத்தில் நடந்த மாணவன் கொலை வழக்கில், ஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் மாணவரை கொலை செய்ததாக கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கோவிந்தசாமி தெருவில் கந்தசாமி வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 21ம் திகதி, மாலை டியூஷனுக்கு சென்ற அவரது 11ம் வகுப்பு படிக்கும் மகன் சூரியபிரகாஷ் வீடு திரும்பவில்லை.

அவனது பெற்றோர், சூரியபிரகாசின் செல்போனிற்கு தொடர்பு கொண்டபோது பேசிய மர்ம நபர் ரூ. 25 லட்சம் கொடுத்தால்தான் உங்கள் மகனை விடுவிப்போம் எனக்கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த 23ம் திகதி, சூரியபிரகாஷ் வீட்டின் கீழ்பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு பிணமாக கிடந்துள்ளார்.

இந்தகொலை தொடர்பாக ஒட்டல் உரிமையாளர் ஜவகர்பாபு, அவரது மனைவி ஆரவள்ளி ஆகிய இருவரையும் பொலிசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது ஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் மாணவரை கொன்றேன் என்று ஜவகர்பாபு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து ஜவகர் பாபுவை பொலிசார் கைது செய்து சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer