Wednesday, April 30, 2014

தமிழ் மற்றும் தெலுங்கு பட நடிகை மதுஷாலினி, உங்கள் விரலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

தனியார் நிறுவனம் எடுத்துள்ள அந்த காணொளியில், நடிகை மதுஷாலினி சென்ற முறை நான் என்னுடைய விரலை பயன்படுத்தினேன்.

அதன்பின்னர் மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும், தற்போது என்னுடைய விரலை நான் கவனமாக பயன்படுத்தியுள்ளேன்.

தற்போது எனக்கு மிகவும் பிரமிக்கதக்க அனுபவம் கிடைத்துள்ளது. என்னைப்போலவே நீங்களும் உணர உங்கள் விரலை பயன்படுத்துங்கள். விரலை பயன்படுத்தி தவறாமல் வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.

இந்த காணொளியை பார்த்த இயக்குனர் ராம்கோபால் வர்மா அதை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

மேலும், ஏராளமானோர் இந்த விளம்பரத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer