Friday, April 25, 2014

ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல், வெப்பம், தங்க மீன்கள் போன்ற திரைப்படங்களை தயாரித்து நல்ல தயாரிப்பாளராகவும் திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் கௌதம் மேனன். அதிலும் கௌதம் மேனன் தயாரித்த தங்க மீன்கள் திரைப்படம் 3 தேசிய விருதுகளை பெற்று அவரை மகிழ்ச்சியின் உச்சிக்கே கொண்டுசென்றுவிட்டது.

கௌதம் மேனன், அஜித், அனுஷ்கா இணைந்துள்ள பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது தான் கௌதம் மேனனுக்கு தன் படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது தெரியவந்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியான தகவலை உடனே அஜித்திடம் பகிர்ந்துகொண்டாராம் கௌதம் மேனன். தனது இயக்குனருக்கு தேசிய விருது கிடைத்தது குறித்து பெருமைப் பட்ட அஜித் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே எழுந்து நின்று கைதட்டி அவரை வாழ்த்தியிருக்கிறார். விஷயம் அறிந்த யூனிட் ஆட்கள் அனைவரும் கைதட்டி கௌதம் மேனனை பாராட்டியிருக்கிறார்கள்.

தங்க மீன்கள் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது அறிந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்த இயக்குனர் ராம் மற்றும் படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் சதீஷ் ஆகியோர் கௌதம் மேனனைப் பற்றி ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer