Tuesday, April 22, 2014

இலங்கைக்கு சுற்றுலா சென்று பிரித்தானிய பெண் அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த நவோமி மைக்கேல் கோல்மன் (37) என்ற பெண் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவர் தற்போது இலங்கையில் உள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பிரித்தானியப் பெண்ணின் வழக்கினை கையாள்வதாக பிரிட்டிஷ் வெளியுறவு மற்றும் கொமன்வெல்த் அலுவலகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிடுகையில், குறித்த பிரித்தானியப் பெண் வலது கையில் தாமரை மலர் மீது அமர்ந்துள்ள புத்தரின் படத்தினைப் பச்சை குத்தியது ஏனைய மதத்தினை புண் படுத்துவதாக உள்ளது. இதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

நீதிமன்றம் அவரை நாடுகடத்துமாறு உத்தரவிட்டுள்ளது. தற்போது நாடுகடத்தப்படும் வரை அவர் குடிவரவு தடுப்புக்காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நாளை அல்லது நாளை மறுநாள் நாடுகடத்தப்படலாம் என தெரிவித்துள்ளார்.

இதேபோல், கடந்த வருடமும் புத்தரின் படத்தினை பச்சை குத்தியிருந்த வெளிநாட்டுப் பிரஜையொருவர் நாடுகடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer