Wednesday, April 30, 2014

நடிகை சமந்தா சமீபத்தில் தமிழில் வெளியான ஒரு படத்தை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டாராம்.

‘அந்த படம் நல்லாயிருக்கு, ஆனா தியேட்டர்ல நாலு பேரு கூட இல்ல...’ என்று அவருக்கு சொல்லப் பட்ட தகவல்கள் அளவு கடந்த மகிழ்ச்சியை அவருக்கு ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான அந்தப் படத்தின் ஹீரோ, இத்தனைக்கும் பெரிய அளவில் பேசப்படுகிறவரும் அல்ல.

நிஜத்தில் ஒரு வர்த்தக நிறுவன அதிபரின் வாரிசான இவருக்கும் சமந்தாவுக்கும் அப்படியென்ன சம்பந்தம்? ஹீரோவின் சறுக்கலை தெரிந்து கொண்டு அவர் ஏன் சந்தோஷப்பட வேண்டும்? என்கிற விஷயத்திற்குள் நுழைந்தால், அதிர்ச்சியோ அதிர்ச்சி. சமந்தாவை ஆந்திராவை நோக்கி அலற அலற ஓட விட்டவரே அவர்தானாம். ‘தமிழ்நாட்டுக்கு வந்தால் இந்த பையன் பண்ற டார்ச்சர் தாங்க முடியல’ என்று புலம்பியபடியே ஓடியவருக்குதான் அங்கு ரத்ன கம்பள வரவேற்பு. இவ்வளவு ‘வசந்த’மான வாழ்க்கையை தெரிந்தோ தெரியாமலோ தந்த இந்த சின்னப் பையனுக்கு சமந்தா நன்றியல்லவா சொல்ல வேண்டும்?

0 comments :

Post a Comment

 
Toggle Footer