Tuesday, April 29, 2014

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் நடிகர், இசை அமைப்பாளராக மாறினார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் நடிகராக மாறிவிட்டார்.

நான் ஈ பட வில்லன் சுதீப் நடிக்கும் புதிய கன்னட படமொன்றில் நடிக்க ஸ்ரீசாந்துக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுதவிர எஸ் 36 என்ற இசை குழு ஒன்றையும் உருவாக்கி இருக்கிறார். இதன் மூலம் பாடல் ஆல்பம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். சினிமா படங்களுக்கு இசை அமைக்க முடிவு செய்துள்ள ஸ்ரீசாந்துக்கு அவரது மைத்துனரும், பாடகருமான மது பாலகிருஷ்ணா உடனிருந்து உதவி வருகிறார். மலையாள படங்களில் நடிக்கவும் ஸ்ரீசாந்துக்கு அழைப்பு வந்துள்ளது. தமிழ் படத்தில் நடிக்கவும் அவர் சில இயக்குனர்களுக்கு தூதுவிட்டிருக்கிறாராம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer