மே 9-ஆம் தேதி கோச்சடையான் ரிலீஸாகவில்லை என்ற தகவல் கோலிவுட்டில் பரவத்துவங்கியதும் ரசிகர்கள் குழப்பமடந்துவிட்டனர். கோச்சடையான் திரைப்படத்தின் ஒரு தயாரிப்பாளரான முரளிமனோகருக்கு கோச்சடையான் திரைப்படத்தில் திருப்தி இல்லையென்றும், அதனால் அவர் மே-9ஆம் தேதி ரிலீஸ் செய்யவேண்டாம் என்று கூறியதாகவும் பேசப்பட கோச்சடையான் திரைப்படக்குழுவினரும் அதிர்ச்சியடைந்துவிட்டார்களாம். ஆனால் இது குறித்துவிசாரித்தபோது, கோச்சடையான் திரைப்படத்தை வெளியிடுபவர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையினால் இந்த வதந்தி வெளியாகியிருக்கின்றது என்று தெரியவந்திருக்கிறது.
எனவே இந்த வதந்தி குறித்து தமிழ்நாடு விநியோகிஸ்தர்கள் சங்க செயலாளர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய ஜெயக்குமார் “ பெரிய படங்களின் ரிலீஸின்போது டிக்கெட் விலை உட்பட பலவற்றைப் பற்றி பேச்சுவார்த்தை நடப்பது சகஜம் தான். கோச்சடையான் திரைப்படத்திற்கு வரிவிலக்கும் கிடைத்திருப்பதால் பலவற்றைப் பற்றி பேசி ஒரு முடிவெடுப்பதற்காகத் தான் அந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய விதத்தில் அமைந்துவிட்டதால், கோச்சடையான் திட்டமிட்டபடி விளம்பரங்கள் செய்து அறிவிக்கப்பட்ட நாளில் கண்டிப்பாக வெளியாகும்” என்று கூறியிருக்கிறார்.
Thursday, April 24, 2014
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment