Wednesday, April 23, 2014

இரண்டு வருடங்களாக ஷங்கர் எடுத்து கொண்டிருக்கும் படம் தான் "ஐ".

இதில் விக்ரம் தன்னால் முடிந்த உழைப்பை தந்து இருக்கிறார், அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். இப்படம் எப்போது வரும் என்று விக்ரம் மட்டுமல்ல ஷங்கருக்கே தெரியாது.

இந்த நேரத்தில் தான் கொஞ்சம் ஆறுதலான தகவல் கிடைத்துள்ளது.

"ஐ" படத்தில் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் எடுத்து முடித்து விட்டனர், மீதம் எமி ஜாக்சனின் ஒரு பாடல் மட்டுமே எடுக்கப்படவுள்ளது.

ஷங்கரின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இதற்கும் இசையமைத்துள்ளார், மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் பாடல்கள் மே மாதத்தில் வரும் எனவும் இதை சோனி நிறுவனம் வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

"படம் எடுக்க இவ்ளோ நாளா இல்லை பாட்டு எடுக்க மட்டுமே இவ்ளோ நாளா".

0 comments :

Post a Comment

 
Toggle Footer