Tuesday, April 29, 2014

பிரான்ஸ் நாட்டில் ஓரினச்சேர்க்கை ஆண்களை காரில் எற்ற மறுத்த குற்றத்திற்காக டாக்ஸி சேவை ஓட்டுநர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில், இரண்டு ஓரினசேர்க்கை ஆண்கள் ’uber’ என்ற டாக்ஸி சேவை நிறுவனத்தில் கார் பதிவு செய்துள்ளனர்.

இதனை அடுத்து காரை எடுத்த வந்த ஓட்டுநர், இருவர்களிடமும் சில கேள்விகள் கேட்ட பின் அவர்கள் ஓரினச்சேர்க்கை ஆண்கள் என தெரிய வந்ததும், ஓரினச்சேர்க்கை ஆண்களுக்கு காரில் இடமில்லை என்று கூறிவிட்டு காரை எடுத்துச்சென்றுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த ஓரினச்சேர்க்கையாளர்கள், ஓட்டுநரின் கார் நம்பரை வைத்து டிவிட்டர் மூலம் ’uber’ நிறுவனத்திற்கு புகார் அனுப்பியுள்ளனர்.

இதனால் அந்த நிறுவனம், அவரை பணியில் இருந்து நீக்கம் செய்து உள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer