Wednesday, April 9, 2014

முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் ’கத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தா மற்றும் ஹைதராபாத்ஆகிய இடங்களில் நடைபெற்றது. தற்போது சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக முகமிட்டுள்ளது கத்தி படக்குழு. கத்தி திரைப்படத்தை ஐங்கரன் இண்டர்னேஷனல்ஸுடன் இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவின் நண்பரான சுபாஷ்கரனுக்குச் சொந்தமானது என்றும் இந்த படத்தை தயார் செய்வது தமிழர்களுக்கு எதிரானது என்றும் கடல் கடந்து வாழும் ஈழத்தமிழர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் கத்தி திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் குழு சார்பிலிருந்து அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்த அறிக்கையில் ”லைகா மொபைல்ஸ் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் ஞானம் புரொடக்‌ஷன்ஸ் என்ற பெயரில்  இலங்கையில் உள்ள தமிழர் நலன் மேம்பாட்டிற்காக கடந்த 5 ஆண்டுகளாக மூலமாக பல நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறது. லைகா நிறுவனம் இலங்கை அரசிற்கு ஆதரவானது என்று வெளியான செய்திகள் தவறானதும், ஆதாரமற்றதும் ஆகும்” என்று கூறியுள்ளனர்.

ராஜபக்சேவுக்கும் லைகா நிறுவனத்துக்கும் சம்மந்தம் இல்லை என்று மறுத்தாலும் லைகா நிறுவனத்தின் நிறுவனரான சுபாஷ்கரன் ராஜபக்சேவின் நண்பர் என்பதற்கு பல ஆதாரங்களை பத்திரிக்கைகளில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer