Wednesday, April 30, 2014

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங், பத்திரிகையாளரான அம்ரிதா ராய் உடனான தனது உறவு குறித்து வெளிப்படையாக அறிவிக்க தயக்கம் எதுவுமில்லை என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

திக் விஜய் சிங் தனது ட்விட்டர் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அம்ரிதா ராய் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் தங்களுக்குள் கருத்தொற்றுமை ஏற்பட்டு விவாகரத்து கோரியுள்ளனர்.

அவர்கள் விவாகரத்து முடிவானதும் நாங்கள் மற்ற விஷயங்களை ஒழுங்குபடுத்தி கொள்வோம்.

மேலும், எங்களது தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவதை நான் கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்று அம்ரிதா ராய் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், தற்போது நான் எனது கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்கிறேன்.

நாங்கள் இருவரும் கருத்தொருமித்து விவாகரத்து கோரி அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்துள்ளோம் என்றும், அதன் பின்னரே திக் விஜய் சிங்கை திருமணம் செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer