Wednesday, April 30, 2014

மே தின பொதுக்கூட்டத்தில் பங்கேற்காமல், செலவுகளில் இருந்து தப்பிக்க விடுமுறை கேட்ட கட்சி நிர்வாகிகளுக்கு தே.மு.தி.க தலைமையிடம் அனுமதி மறுத்துள்ளது.

தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தே.மு.தி.க. 14 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது.

இந்நிலையில், பல தொகுதிகளில் மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக, தேர்தல் செலவுகளை செய்ய முடியாமல் தே.மு.தி.க. வேட்பாளர்கள் திணறியுள்ளனர்.

தற்போது தேர்தல் முடிந்து விட்டதால் ஒரு வழியாக நிலைமையை சமாளித்து விட்டோம் என்ற மனநிலையில் மாவட்ட நிர்வாகிகள் இருந்துள்ளனர்.

ஆனால் மே 1ம் திகதி தொழிலாளர் தினத்தை கொண்டாட தே.மு.தி.க. தலைமை முடிவு செய்துள்ளது.

மேலும், இந்த பொதுக் கூட்டத்திற்கான செலவுகளை, மாவட்ட நிர்வாகிகள் ஏற்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சில மாவட்ட நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தலைமை சுமத்தியுள்ள செலவுகளில் இருந்து தப்பிக்க, குடும்பத்தினருடன் நேரம் செலவிட உள்ளதாகவும், மே தின பொதுக் கூட்டத்தை பின்னர் நடத்துகிறோம் எனவும் அனுமதி கேட்டுள்ளனர்.

இந்த தகவலை அறிந்ததால் கோபமடைந்த விஜயகாந்த், மே தின பொதுக் கூட்டத்தை நடத்தியே ஆகவேண்டும் என்றும் வேண்டுமானால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளலாம் என கூறியதாகவும் கூறப்படுகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer