Wednesday, April 30, 2014

மர்மநபர்களால் ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நரேந்திர மோடியின் மனைவியை கண்டுபிடிக்க வேண்டுமென தலைமை நீதிபதிகளுக்கு வழக்கறிஞர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட போது வேட்பு மனுவில் தனது திருமணம் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆனால், வதோதரா மக்களவை தொகுதியில் தற்போது வேட்பு மனு தாக்கல் செய்த போது, தனக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், தனது மனைவியின் பெயர் ஜசோதா பென் என்றும் முதல் முறையாக குறிப்பிட்டிருந்தார்ட்

இந்த செய்தி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஜசோதா பென்னை பேட்டி எடுக்க நிருபர்கள் சென்ற போது அவர் கேதார்நாத், பத்ரிநாத் யாத்திரை சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஹரித்வாரில் உள்ள ராம்தேவ் ஆசிரமத்தில் அவரை அடைத்து வைத்திருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதனை ராம்தேவ் மறுத்துள்ளார்.

இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் ஜசோதா பென்னின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிசாருக்கு உத்தரவிடவேண்டும் எனவும் நீதிபதிகளுக்கு மீரட்டை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிசங்கர் கடிதம் எழுதியுள்ளார்.

இதனையடுத்து, இந்த கடிதத்தின் நகல் உள்துறை செயலர் மற்றும் டெல்லி பொலிஸ் கமிஷனருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer