Monday, April 28, 2014

கோச்சடையான் படத்தின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருப்பதை யாவரும் அறிவர்.

அந்த படம் திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் ஆகுமா? என்கிற பெரும் குழப்பம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ரஜினிக்கே இருப்பதுதான் வேடிக்கை.

கடந்த சில தினங்களுக்கு முன் இந்த படத்தை தயாரித்து வரும் முரளி மனோகரை சந்திக்க கடன்காரர்கள் கூட்டமாக வந்துவிட்டார்கள். மாற்றான் படத்தை வெளியிட்ட வகையிலேயே இவர் பனிரெண்டு கோடி ரூபாய் நஷ்டத்தை ஈடு கட்ட வேண்டியிருந்ததாம். இதுபோல் இன்னும் சில படங்களையும் சேர்த்து சுமார் நாற்பது கோடி கடன்.

இந்த படம் வெளியாகிவிட்டால் முரளி மனோகர் லண்டனுக்கு தப்பிவிடுவார். அதற்கப்புறம் அவர் சென்னை வருவது எப்போது என்று யாருக்கும் தெரியாது. அதனால் கடனை வசூலிக்காமல் படத்தை ரிலீஸ் செய்ய விட்டால், மொத்த பணமும் அம்போதான் என்று சில உளவு தகவல்கள் கடன்காரர்களுக்கு வந்து சேர, ரவுண்டு கட்டிவிட்டார்கள் அவரை.

பணத்தை எண்ணி வச்சுட்டு படத்தை ரிலீஸ் பண்ணுங்க. இல்லேன்னா விட மாட்டோம் என்பதுதான் அவர்களின் காச் மூச் கத்தல்கள். இல்லேன்னா ரஜினி சாரை பொறுப்பேத்துக்க சொல்லுங்க என்றும் இவர்கள் முரண்டு பிடிக்க ரஜினியோ, படமே ரிலீசாகாவிட்டாலும் எனக்கு கவலையில்ல என்று கூறிவிட்டாராம். அப்புறம் என்ன செய்வார் முரளி மனோகர்? ஐந்து கோடி கடனை தள்ளுபடி செய்ய சொன்னார்.

அதற்கும் கடன்காரர்கள் தயாரானார்கள். இறுதியாக பத்து கோடி ரூபாயை பணமாக செட்டில் செய்தார். மீதி இருபத்தைந்து கோடிக்கு செக் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். திங்கட் கிழமை செக் செல்லுபடியானால் படம் வெளியாகும். இல்லையேல்? கோச்சடையானுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு மொத்த பேரும் ஒதுங்கிக் கொள்வார்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer