Sunday, April 27, 2014

பெரிய ஹீரோக்கள் யார் கேட்டாலும் கால்ஷீட்டை வாரி வழங்கிய ஹன்சிகாவுக்கு இப்போது பெரும் தலைவலி. படு பயங்கரமாக கால்ஷீட் சொதப்பல் நடக்கிறதாம்.

இதனால் பல முன்னணி ஹீரோக்களே சங்கடப்படுகிற அளவுக்குக் குழப்பம் நீடிப்பதால், கால்ஷீட் மேனேஜரான அம்மாவே துணைக்கு புரபஷனல் மேனேஜர் ஒருவரை நியமித்துக் கொள்ளலாமா என்கிற அளவுக்கு குழம்பிப் போயிருக்கிறாராம்.

மேனேஜர் வந்தால் மகள் தன் நேரடி கண்காணிப்பிலிருந்து விலகிப் போகிற அவஸ்தையும் வருமே? அதற்காகதான் அந்தப் புது மேனேஜர் அப்பாயின்ட்மென்ட் தள்ளிப் போகிறதாம். எப்படியோ? எல்லாரையும் கீழ்ப்பாக்கம் அனுப்பாமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது அம்மாவும் மகளும். இப்படி புலம்புவது, கால்ஷீட்டுகளுக்கு நடுவில் சிக்கி அவஸ்தைப்படும் புரடக்ஷன் மேனேஜர்கள் தான்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer