Saturday, April 26, 2014

பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்த ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சி மீண்டும் தொடங்க இருக்கிறது. ஏப்ரல் 27 முதல் விஜய் டி.வியில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல் கட்டமாக தமிழ்நாடு முழுவதிலிமிருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 36 அணிகள் போட்டியிட உள்ளன. 8 முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். போட்டிகள் 5 கட்டமாக நடக்கிறது. முதல் கட்ட போட்டியில் 36 அணியிலிருந்து 12 அணிகள் தேர்வு செய்யப்பட்டு அடுத்து கட்ட போட்டிகள் துவங்கும்.

இரண்டாம் கட்ட போட்டியில் 6 அணிகள் தேர்வுபெற்ற 3ம் கட்ட போட்டியில் மூன்று அணிகள் மோதும், இறுதி சுற்றுக்கு இரண்டு அணிகள் வரும் வெற்றி பெறும் அணிக்கு ஒரு வார்த்தைக்கு ஒரு லட்சம் பரிசு வழங்குவதோடு, சான்றிதழும் வழங்கப்படும். நிகழ்ச்சியை ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்குகிறார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer