Wednesday, April 23, 2014

"வேட்டை" வெற்றி படத்தை தொடர்ந்து லிங்குசாமி, சூர்யாவை வைத்து இயக்கம் படம் "அஞ்சான்" .

இப்படத்தின் பெரும்பகுதி மும்பையில் எடுத்த நிலையில் கிளைமாக்ஸ் சண்டை காட்சி மட்டும் கோவாவில் எடுக்கப்பட்டது.

இச்சண்டை காட்சியை ஸ்டண்ட் இயக்குனர் "சில்வா" வடிவமைத்தார்.

அப்போது திடீரென்று சூர்யாவுக்கு ஷுட்டிங்கில் பலத்த காயம் என சமுக வலைதளங்களில் செய்தி ஒன்று பரவியது. இதனால் சூர்யா ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

உடனே விஷயம் அறிந்த படக்குழு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அது சின்ன காயம் தான் இப்போது சூர்யா நலமாக உள்ளார் என அறிவித்தனர். இதை தொடர்ந்து சூர்யாவும் அந்த சண்டை காட்சியை சிறப்பாக முடித்து கொடுத்தார்.

இன்னும் ஒரேயொரு பாடல் காட்சி மட்டுமே பேலன்ஸ் உள்ளதாம். அந்த பாடலில் மரியம் சகாரியா, சித்ரங்கதா சிங் போன்ற கவர்ச்சி புயல்கள் இடம்பெறுகிறார்களாம்.

அந்த பாடல் காட்சி ஜூன் மாதம் படமாக்கப்படுகிறது. படம் ஆகஸ்டில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"எதற்கும் அஞ்சான் தான் சூர்யா".

0 comments :

Post a Comment

 
Toggle Footer