Monday, April 28, 2014

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அல்போன்சா மாம்பழம் மற்றும் சில காய்கறிகளுக்கு தடை விதித்து ஐரோப்பிய யூனியன் உத்தரவிட்டுள்ளது.

இந்திய அல்போன்சா மாம்பழம் மற்றும் காய்கறிகளுக்கு எதிராக 28 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய யூனியன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக அங்குள்ள எம்.பி.க்களும், இந்திய மக்கள் மற்றும் வியாபாரிகளும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தியாவில் இருந்து 2013ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட இந்த பழம் மற்றும் காய்கறிகளில் ஈக்கள், பூச்சிகளின் தாக்கம் அதிகம் இருந்ததை தொடர்ந்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கத்திரிக்காய், முட்டை கோஸ், பாகற்காய் மற்றும் புடலங்காய் ஆகிய காய்கறிகளுக்கும் தற்காலிக தடை விதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவையனைத்தும் வெறும் 5 சதவிகிதத்திற்கும் குறைவான அளவுக்கே அங்கு இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில், இவற்றில் காணப்படும் ஈக்கள் மற்றும் பூச்சிகளால் தங்கள் நாட்டு விவசாயம் பாதிக்கும் என அவர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer