Wednesday, April 30, 2014

ஜப்பானை சேர்ந்த ஆபாச பட நடிகை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து தற்போது ஹாரி பாட்டர் படத்தில் வரும் DOBBY கதாபாத்திரம் போல் மாறியுள்ளார்.

ஜப்பானை சேர்ந்த ஆபாச பட நடிகை ரீனா நானாசே. மொடல் அழகியாக 17 வயதில் கலக்கிய இவர் ருமி கண்டா என்ற பெயரில் ஆபாச படங்களில் நடிக்க தொடங்கினார்.

இவருக்கு திடீரென ஓர் ஆசை வந்தது. தனது கண்கள் பார்ப்பதற்கு சிறியதாகவும், மூக்கு பருத்து இருப்பதாகவும் தோன்றியது. எனவே, அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்வது என்று முடிவெடுத்தார்.

இதற்காக கடந்த வருட இறுதியில், தனது கன்னங்களை மெலிதாக மாற்றுவதற்காக தொடர்ச்சியாக அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார்.

தாடையை கூராக்கவும், மூக்கினை நீளமாக மாற்றவும், கண்களை பெரிதாக மாற்றவும் அவர் தொடர்ந்து அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். அறுவை சிகிச்சைக்கு பின்பு தழும்புகள் நீங்கிய பின்னர் தனது முக தோற்றத்தை புகைப்படங்களாக எடுத்து அவற்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆனால், அந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் அவரை பாராட்டுவார்கள் என எதிர்பார்த்தார்.

ஆனால் அதற்கு நேர் மாறாக, சிகிச்சைக்கு பின்பு அவரது முகம் ஹாரி பாட்டர் படத்தில் வரும் டாபி என்ற குட்டி சாத்தான் போன்ற உருவத்தையே அது பிரதிபலித்தது. இதனால் பெரும்பாலான ரசிகர்கள் அவரை கேலியும், கிண்டலும் செய்தனர்.

"ஓர் அழகான இளம்பெண் தன்னை கெடுத்து கொள்வதற்காக ஏன் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்" என்றும், "அழகான வடிவத்தை சிதைத்து விட்டார்" என்றும் சிலர் கூறியுள்ளனர்.

மேலும், அவரது மனநிலை குறித்தும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால், இவற்றையெல்லாம் புறந்தள்ளிய ரீனா, தனது புதிய முகம் தனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்றும் அதனை குறை சொல்பவர்கள் பொறாமைக்காரர்கள் எனவும் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer