Wednesday, April 30, 2014

விஷால் தற்போது நடித்து கொண்டு இருக்கும் படம் “பூஜை”.

இந்த படத்தில் தனது வெற்றி கூட்டணியான இயக்குனர் ஹரியுடன் மீண்டும் இணைந்துள்ளார், முதன் முறையாக ஷ்ருதி ஹாசனுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. அங்கு அமைத்துள்ள பிரம்மாண்ட செட்டில் விஷால் ஸ்டன்ட் நடிகர்களுடன் மோதும் சண்டை காட்சியை படமாக்கினார்கள், ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணனின் சண்டை பயிற்சியில் இக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

அப்போது விஷால் ஒரு ஸ்டன்ட் நடிகரை ஓங்கி அடிப்பது மாதிரி நடிக்கும்போது, அந்த ஸ்டன்ட் நடிகர் திடீர் என்று விலகிக் கொண்டதால் விஷாலின் கை ஒரு தகரத்தில் பட்டு அவருடையை இரண்டு விரல்களில் சதை கிழிந்து ரத்தம் கொட்டியது. அதை தொடர்ந்து அவரின் கைவிரல்களில் 22 தையல் போடப்பட்டது.

விஷாலை ஒரு சில நாட்கள் ஓய்வு எடுக்க சொல்லியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer