Wednesday, April 23, 2014

இயக்குனர் விஜய் மற்றும் அமலாபால் இருவரும் காதலிக்கின்றனர் என்ற செய்தி அனைவரிடத்திலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.

பின் இருவரும் மீடியாக்களுக்கும், கிசுகிசுக்கும் இடம் தராமல் தங்கள் காதலை ஒப்புக் கொண்டதுடன் திருமணம் மற்றும் நிச்சயதார்த்த திகதிகளையும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இவர்கள் திருமணத்தில் ஒரு சிக்கல் எழும்பியுள்ளது. அமலாபால் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர், விஜய்யோ இந்து, செட்டியார் மதத்தை சேர்ந்தவர்.

திடீரென்று எதற்கு இவர்கள் மதத்தை பற்றி சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா, இருக்கே, அதற்கு ஒரு காரணம் இருக்கே.

கேளுங்க, திருமண தேதி குறிக்கும் வரை மதத்தை பற்றி கவலை படாத அமலாபாலின் பெற்றோர் இப்போது ஒரு புதிய புதிரை போட்டுள்ளார்களாம்.

விஜய்யை கிறிஸ்துவ மதத்திற்கு மாறும் படி வற்புறுத்தி வருகின்றனராம், ஆனால் விஜய்க்கோ இவ்விஷயத்தில் விருப்பமில்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறாராம்.

என்ன கொடும சார் இது, வென்னை திரண்டு வரும் போது பான ஒடஞ்சி போகுதே, கொஞ்சம் யோசிங்க சார் யோசிங்க.

0 comments :

Post a Comment

 
Toggle Footer