Tuesday, April 29, 2014

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் கோச்சடையான் படத்தினை பார்ப்பதற்கு பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி ரெடியாகி வருகிறார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் திரைப்படம் உலகம் முழுவதும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகளில் மே 9ம் திகதி வெளியாகிறது.

இந்நிலையில் ‘கோச்சடையான்’ படத்தை பார்க்க மோடி சமீபத்தில் விருப்பம் தெரிவித்ததாகவும், அவருக்கான சிறப்புக் காட்சிக்கு படக்குழுவினர் ஏற்பாடு செய்து வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பட வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக மே 8ம் திகதி மும்பையில் நடைபெறவுள்ள சிறப்புக் காட்சியில் இப்படத்தை நரேந்திரமோடிக்கு திரையிட்டு காட்ட முடிவெடுத்துள்ளனர்.

இந்த சிறப்புக் காட்சியில் இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் படத்தைக் கண்டு ரசிக்கவுள்ளனர். இதற்கான ஏற்பாட்டை ‘கோச்சடையான்’ படத்தை வெளியிடும் மும்பை ஈரோஸ் இண்டர்நேஷனல் பிக்சர்ஸ் புரெடக்‌ஷன் நிறுவனம் செய்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இது தவிர, குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்திலும், மோடிக்காக இப்படத்தை திரையிட்டுக் காட்டப் போவதாகவும், மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer