Tuesday, April 22, 2014

மேஷம்
ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணை புரியும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கனவு பலிதம் உண்டு. கட்டிடம் கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

ரிஷபம்
யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெண் வழி பிரச்சினைகள் தீரும்.

மிதுனம்
காரிய வெற்றிக்கு கடவுளை வழிபட வேண்டிய நாள். பிரியமான சிலரிடம் யோசித்து பேசும் சூழ்நிலை உருவாகலாம். மறதியால் அவதிகளுக்கு ஆட்பட நேரிடும். உடல் நலனுக்காக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.

கடகம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். விட்டுப் போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள்.

சிம்மம்
எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். இனத்தார் பகை மாறும். தேக ஆரோக்யம் தெளிவு பெறும். பழைய கடன் பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.

கன்னி
நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும்.

துலாம்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வாகன பழுதுகளை சரி செய்யம் எண்ணம் உருவாகும். தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள்.

விருச்சகம்
பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். தொழில் முன்னேற்றம் கருதி புதிய பணியாளர்களைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்வீர்கள். உடன் பிறப்புகளின் ஒத்துழைப்பு கிட்டும்.

தனுசு
இன்பங்கள் இல்லம் வந்து சேரும் நாள். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். அரசு வழி சலுகை கிட்டும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக விளங்குவர்.

மகரம்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும், திட்டமிடாத காரியமொன்று நடைபெறும்.

கும்பம்
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். பொது நலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். இடமாற்றம், ஊர் மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது.

மீனம்
லாபகரமான நாள். விரும்பிய காரியத்தை விரும்பிய படியே செய்து முடிப்பீர்கள். அன்னிய தேச தொடர்பு அனுகூலம் தரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer