Thursday, April 10, 2014

மகரம்: உத்திராடம் 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதங்கள் ஆகிய நக்ஷத்திரங்கள் பிறந்தவர்கள்  மற்றும் ஜி, கி, கு, கே, கோ, க, சி, சே, சோ  ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

நிதானத்தோடு எந்த காரியங்களிலும் இறங்கி நினைத்த இலைக்கை எட்டிப் பிடிக்கும் மகர ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில் ஆயுளை வழங்குபவர் என்றழைக்கப்படும் கர்மகாரகனாகிய சனியை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். இருப்பதைக் கொண்டு எளிய வாழ்வு முறையை வாழ்ந்து அமைதியுடன் இருக்க விரும்புபவர்கள்.

கிரகநிலை: இந்த புத்தாண்டில் உங்கள் சுகஸ்தான ராசியில் கேதுவும், ராசிக்கு  தொழில் ஸ்தான 10ம் இடத்தில் ராசிநாதன் சனியுடன் ராகுவும் இருக்கிறார்கள். ரணருண ரோக ஸ்தானத்திலுள்ள குரு 13-06-2014 அன்று உங்கள் களத்திர ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார். கர்ம தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் சனி  21-07-2014 அன்று வக்ர நிவர்த்தி ஆகிறார். 21-06-2014 அன்று ராகு பகவான் பாக்கிய ஸ்தான கன்னிக்கும், கேது தைரிய வீர்ய ஸ்தான  மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள். ராசிநாதன் சனீஸ்வர பகவான் 17-12-2014 அன்று பெயர்ச்சியாகி லாப ஸ்தான விருச்சிக ராசிக்கு செல்கிறார்.

குருவின் ஆறாம் இட அமர்வு உங்கள் வாழ்வியல் நடைமுறையில் சில சிரமங்களை எதிர்கொள்ள வைப்பார். இருப்பினும் ராசிநாதனால் நல்ல பலன்களும் ஏற்படும். மிதுனத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு பத்தாம் இடமான தொழில், 12ம் இடமான கூடுதல் செலவு, இரண்டாம் இடமான குடும்பம், வாக்கு, பணவரவு ஆகிய இடங்களை பார்க்கிறார். 

பணரவரவு குறையும் என்பதால், குடும்பத்தேவைகளை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். கடன் வாங்கும் சூழலும் ஏற்படலாம். அதே நேரம் பணவரவுக்கான நல்ல வாய்ப்புகளும் தேடி வரும் என்பதால், அதைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் நிதிநிலை பற்றி கவலைப்பட வேண்டி வராது. தைரிய சிந்தனையும், மனதில் நம்பிக்கையும் வளரும். அவ்வப்போது உடல்நல பாதிப்பு வரலாம் என்பதால் பணிகளில் தாமதம் ஏற்படும். வீடு, வாகன வகையில் இருக்கிற வசதியை காத்துக் கொண்டாலே போதுமானது.

தாய்வழி உறவினர்கள் கருத்து வேறுபாடு கொள்வர். அவர்களிடம் வாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் தொந்தரவு தராத வகையில் நல்ல குணத்துடன் நடந்துகொள்வர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து குடும்பச் செலவுகளை ஈடுகட்டும் வகையில் நடந்துகொள்வர்.  தம்பதியர் ஒற்றுமையுடன் குடும்பநலன் காத்திடுவர். நண்பர்களிடம் எதிர்பார்க்கிற உதவி கிடைக்கும். உறவினர் குடும்ப சுபநகிழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்கிற சூழ்நிலையும் அதனால் கூடுதல் செலவும் ஏற்படும்.

வெளியூர் பயணம் புதிய அறிமுகங்களை பெற்றுத்தரும். முயற்சி செய்த அளவுக்கு வெற்றி, ஆனால் நினைத்த இடத்திற்கு வரத்தடைகள் என அனைத்தும் இனி மாறும். முயற்சிகளை இருமடங்காக்குங்கள், வெற்றிகள் உங்களைத் தேடி வரும் காலமிது. உங்கள் பொன்னான நேரத்தை அடுத்தவருக்காக வீணாக்காதீர்கள். அடுத்தவரை பற்றி பேசாவிட்டாலும் நீங்கள் கூறியதாக சிலர் பற்ற வைக்க கூடும். கவனம் தேவை. யாரையும் முழுமையாக நம்பவேண்டாம். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை முடிந்த வரை தவிர்க்கவும். எந்த காரியத்திலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்காதீர்கள்.

கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறிது முயற்சி தேவை. வீடு, மனை வாகனம் வாங்கும் யோகம் அமையும். தாயார், தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு மறையும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து அதை செய்ய மறவாதீர்கள். உடல்நிலையில் மிகுந்த கவனம் தேவை. வாகனங்களை கையாளும்போது எச்சரிக்கை தேவை. வாழ்க்கைதுணையுடன் உறவு சிறக்கும். புதிய நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. தந்தையுடன் உறவு சிறக்கும்.

வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு பொன்னான காலமிது. உங்கள் வியாபாராத்தை பெருக்கும் காலமிது. மிகவும் லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். ஏதேனும் பயணம் செய்ய நேர்ந்தால் சரியாக திட்டமிடவும். பணவரவு பெறுதில் தாமதம் இருக்கும். மற்ற தொழில் செய்வோருக்கு இவர்களை விட ஓரளவுக்கு நல்ல நிலை இருக்கும். கலங்காமல், உற்சாகத்துடன் செயல்படுவதால் தொழில் சிரமங்கள் விலகும்.

புதிய தொழில்நுட்பங்களை தொழிலில் பயன்படுத்துகிற கட்டாய சூழ்நிலை உருவாகும். புதிதாக தொழில் துவங்க விரும்புபவர்கள் எதிர்வரும் காலங்களில் முயற்சிக்கலாம். நீண்டகால பாக்கிகள் வருவது இழுத்தடிக்கும். வியாபாரத்தைத் தக்க வைக்க சிறிதளவு கடன் பெறுவீர்கள். சரக்கு கிட்டங்கிகளில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும். ஒழுங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சிலருக்கு பணி வாய்ப்பு குருவருளால் கிடைக்கும்.

மேல்நிலை மாணவர்கள் ஒரு நிமிஷத்தைக் கூட வீணாக்காமல் படித்தால் தான் உயர் மார்க் பெறலாம். நினைத்த துறையில் கல்லூரி கிடைக்கும். நண்பர்களுடன் சேர்ந்து சுற்றும் பழக்கம் மேலோங்கும், தவிர்க்கவும். படித்து முடித்தவர்களுக்கு சுமாரான சம்பளத்தில் வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் அதை பாதுகாப்பதில் அதிக கவனம் கொள்ள வேண்டும்.

பரிகாரம் : சனிதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீநடராஜரை வணங்கி வரவும். முடிந்தால் தேங்காய் விளக்கு போடவும்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு

செல்ல வேண்டிய தலம்: திருப்பதி, நாமக்கல், திருநள்ளாறு

அதிர்ஷ்ட கல்: நீலக்கல், கார்னெட்

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீசிவன், ஸ்ரீஆஞ்சநேயர்

இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

2 comments :

 
Toggle Footer