Monday, April 28, 2014

நாகர்கோவிலில் உள்ள ஏடிஎம் ஒன்றில் ரூ.2 ஆயிரம் பணம் எடுத்தவருக்கு கூடுதலாக ரூ.700 கிடைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் உள்ள வங்கி ஏடிஎமில் ஒருவர் ரூ.4 ஆயிரம் பணம் எடுக்க முயன்றபோது, வங்கி செயல்பாடுகள் முடிந்த பின்னர் அவருக்கு பணம் வரவில்லை. ஆனால், ரூ.4 ஆயிரம் எடுத்துவிட்டதாக சிலிப் வந்துள்ளது.

இதுதொடர்பாக வங்கி மேலாளருக்கு அவர் தகவல் தெரிவித்ததும், சம்பந்தப்பட்ட வங்கியின் மேலாளர் ஏடிஎம் இருக்கும் இடத்திற்கு வந்துள்ளார்.

அப்போது வேறொருவர் ரூ.2 ஆயிரம் பணம் எடுக்க ரூ.700 அதிகமாக வந்தது. இதனை கண்ட வங்கி மேலாளர் அதிகமாக வந்த ரூ.700ஐ அந்த நபரிடம் இருந்து திரும்ப பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் பணம் எடுப்பவர்களுக்கு கூடுதல் பணம் வருவதும், சிலருக்கு பணம் வராமலேயே பணம் வந்ததாக சிலிப் வருவதுமாக உள்ளது என்று மேலாளரிடம் புகார் தெரிவித்தனர்.

சிறிது நேரம் அந்த ஏடிஎம் செயல்பாடுகளை கண்காணித்த வங்கி மேலாளர் பின்னர் ஏடிஎம் அறையின் ஷட்டரை மூடிவிட்டு சென்று விட்டார்.

இச்சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer