Tuesday, April 22, 2014

பிரான்சில் கிட்டார் ஆசிரியருடன் 15 வயது மாணவி தலைமறைவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Laureelen என்ற பெயருடைய 15 வயது பிரெஞ்சு பெண் பிரான்சின் வடக்கு பகுதியில் உள்ள நகரம் ஒன்றில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த 10ம் திகதியன்று பள்ளிக்கு சென்ற Laureelen, வீடுதிரும்பாமல் அவரது குடும்ப நண்பரான 48 வயதுடைய Christophe என்பவருடன் தலைமறைவானார்.

இவர்களை கண்டுபிடிப்பதற்காக பொலிசார் ஐரோப்பா முழுவதும் தனது தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர்.

Christophe என்பவரே குறித்த பெண்ணை கடத்திச் சென்றிருக்க கூடும் என பொலிசார் சந்தேகித்தனர்.

இவர் ஏற்கனவே தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தவர் என்பதால் சந்தேகம் வலுவடைந்தது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் சொந்த ஊரிலேயே பிடிபட்டுள்ளனர், அதாவது பிரெஞ்சு இரயில் நிலையம் அருகே இவர்களை பொலிசார் கைது செய்தனர்.

15 வயது பெண்ணை கடத்தி சென்ற குற்றத்திற்காக Christophe கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer