Thursday, March 27, 2014

பாலா இயக்கி வரும் கெட்டிமேளம் படத்திற்கு இசைஞானி இளையராஜாதான் இசை என்பதை யாவரும் அறிவர். இந்த படத்திற்காக சுமார்

12 பாடல்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறாராம் இசைஞானி. அதுவும் ஆறே ஆறு நாட்களில்.

பிரகாஷ்ராஜின் ‘உன் சமையலறையில்’ படத்திற்கும் இசைஞானி இளையராஜாதான் இசை. இது தொடர்பாக இளையராஜாவின் இசைக் கூடத்திற்கு வந்திருந்தார் பிரகாஷ்ராஜ். அங்கு பாலாவும் இருந்தார். பிரகாஷ்ராஜை பார்த்தவுடன் சிறிது நேரம் அவரிடம் பேசிக் கொண்டிருந்த பாலா, ‘என் படத்து பாடலை கேளுங்க’ என்று கூறி அவரை உள்ளே அழைத்து சென்று தன் படத்திற்காக இளையராஜா இசையமைத்த பாடல் ஒன்றை ஒலிக்க விட்டார்.

அதை கண்மூடி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த பிரகாஷ்ராஜ் நெகிழ்ந்து போனார். ‘இப்ப மட்டும் இளையராஜா வந்தார்னா அவர் கால்ல விழுந்துருவேன்’ என்று பிரகாஷ்ராஜ் சொல்லவும், கதவை திறந்து கொண்டு இசைஞானி வரவும் சரியாக இருந்தது. பொசுக்கென்று அவர் காலை கட்டிப்பிடித்துக் கொண்ட பிரகாஷ்ராஜ், உணர்ச்சிப் பெருக்கில் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார். ‘பிரகாஷ்... எந்திருங்க’ என்று ராஜா அவரது தோள்களை பற்றி எழுப்பியும் விடாமல் சிறிது நேரம் அப்படியே இருந்த பிரகாஷ்ராஜ் சிறிது நேரம் கழித்துதான் ஆசுவாசமானார்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பாலா, நீங்க இவ்வளவு மென்மையானவரா இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கல. இந்த மனசு உள்ளவர் எப்படி வில்லனா நடிக்கிறார்னு நினைச்சா ஆச்சர்யமா இருக்கு. இனிமே நீங்க வில்லனா நடிக்காதீங்க என்று கேட்டுக் கொண்டார். அத்துடன், இது ராஜா சாரோட ஆயிரமாவது படம் என்று பாலா கூற, பிரகாஷ்ராஜ் அவரிடம் சிரித்துக் கொண்டே கூறினார். அப்படின்னா நான் ஆயிரத்தில் ஒருவன் என்று.

வேறொன்றுமில்லை. பிரகாஷ்ராஜின் உன் சமையலறையில் படம் இளையராஜா இசையமைக்கும் ஆயிரத்து ஓராவது படம்.

4tamilmedia

0 comments :

Post a Comment

 
Toggle Footer