Saturday, March 29, 2014

இனம் படத்தில் பிரச்சினைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டோம் என இயக்குனர் லிங்குசாமி அறிவித்துள்ளார்.

இப் படம் தொடர்பாக எழுந்துள்ள எதிர்ப்புக்களையும், சர்ச்சைகளையும் தொடர்ந்து, இப் படத்தின் வெளியீட்டாளர்களான திருப்பதி பிறதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குனர் லிங்குசாமி வெளியியட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பள்ளிக்கூடக் காட்சி.

* புத்தமதத் துறவி தமிழர்களுக்கு மாதுளம்பழம் கொடுக்கும் காட்சி.

* சிங்கள ராணுவத்தான் குழந்தை ஃபோட்டோ வைத்திருக்கும் காட்சி.

* தலைவர் கொல்லப்பட்டார் என்ற வசனம்.

* படத்தின் இறுதியில் காட்டப்படும் கார்டில் 38,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்ற தகவல் இடம்பெறும் காட்சி.

ஆகிய ஐந்து காட்சிகளையும் படத்திலிருந்து நீக்கியிருக்கிறார்.

இனம் - ஒரு பார்வை! || இனம் - வலியின் ஒரு துளி...!



தமிழகத்தில்  இத் திரைப்படம் திரையிடப்பட்ட பல இடங்களிலும், தமிழுணர்வாளர்கள் தமது கடுமையான எதிர்ப்பினைக் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer