Thursday, March 27, 2014

ஆக்ஷனையும் அதிரடி சிரிப்பையும் மிக்ஸ் பண்ணுவதில் பூபதி பாண்டியனுக்கு இணை அவரேதான். ‘உங்கக்காள நான் வச்சுக்குறேன்… இந்த பேக்கரிய நீ வச்சுக்க…’ காமெடியை மறக்க முடியுமா? அந்த காட்சி இடம்பெற்ற கிரி படத்தை இயக்கியவர் பூபதிபாண்டியன்தான். மலைக்கோட்டை படத்தில் வடிவேலு ஏட்டாக வருவாரே, அந்த சேட்டைகளைதான் மறக்க முடியுமா? கடைசியாக விஷால் நடித்த பட்டத்து யானை படத்தை இயக்கியவர், அதற்கப்புறம் எங்கே போனார்? என்னவானார் என்பதே தெரியாமலிருந்தது.

அவரது காமெடிக்கு கோடம்பாக்கத்தின் முன்னணி ஹீரோக்கள் பலரும் அடிமையாகிக் கிடக்கும் போது, அவர் காணாமல் போய்விடுவாரா என்ன? ஐ படத்திற்கு பிறகு விக்ரம் நான்கு படங்களில் நடிக்க சைன் பண்ணியிருக்கிறார். அதில் ஒரு படம் பூபதிபாண்டியனுக்கு.

இவர்களின் காம்பினேஷன் முன்பே உருவாகியிருக்க வேண்டியது. படத்திற்கு ராஜா வேஷம் என்று பெயர் கூட வைத்துவிட்டார்கள். நடுவில் யார் பூனையை குறுக்கே விட்டார்களோ, அந்த படத்தை இரண்டு முறை தள்ளி வைத்துவிட்டார் விக்ரம். இப்போதுதான் பூபதி பாண்டியனை அழைத்து நாம பிரஷ்ஷா கிளம்பலாம். தயாராகுங்க என்று கூறியிருக்கிறாராம். இந்த முறையும் ராஜா வேஷம் என்ற தலைப்பைதான் வைத்திருக்கிறார் பூபதி பாண்டியன்.

விக்ரமை எப்படியாவது வளைத்துவிடுவது என்று தவியாய் தவிக்கிறார் த்ரிஷா. ஆனா சீயான் மனசுல என்ன இருக்கோ?

newtamilcinema

0 comments :

Post a Comment

 
Toggle Footer