Monday, March 31, 2014

இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக கூறப்படும் மலேசிய பயணிகள் விமானத்தைக் கண்டுபிடிக்க சில ஆண்டுகள் தேவைப்படும் என்று அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

விமானத்தின் கறுப்புப் பெட்டியை கண்டறியும் ஆளில்லா நீர்மூழ்கிக் கருவி, அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

எனினும் கறுப்புப் பெட்டியின் மின்கலம் செயலிழப்பதற்கு முன்னர் அதை கண்டுபிடித்தால் மட்டுமே அதில் பதிவான தகவல்களை பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.

கறுப்புப் பெட்டியானது விபத்து நிகழ்ந்த 30 நாட்கள் வரை செயலில் இருக்கும்.

மலேசிய விமானம் காணாமல் போய் 3 வாரங்களுக்கு மேலாகிய நிலையில் இதுவரை கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்படவில்லை.

பத்து விமானங்களும், எட்டு கப்பல்களும் தற்போது தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

மலேசிய விமானத்தை நிரூபிக்கும் ஆதாரங்கள்: அவுஸ்திரேலிய பிரதமர்

தேடுதலில் ஈடுபட்டுள்ள கப்பல்களில் ஒன்றான அவுஸ்திரேலியக் கப்பலில் காணாமல்போன விமானத்தின் கறுப்புப் பெட்டியை கண்டுபிடிப்பதற்கான ரேடார் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

இது கடல் மட்டத்துக்கு கீழே ஆறு கிலோமீட்டர்கள் ஆழத்திலிருந்து கிடைக்கும் சமிக்ஞையை கப்பலில் உள்ள இந்த ரேடார் அடையாளம் காணும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer