Thursday, March 27, 2014

2014-ஆம் ஆண்டில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் ஒரேமாதிரியான விமர்சனங்களைப் பெற்று மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் கோலிவ்சோடாவைத் தொடர்ந்து வெற்றிபெற்றிருக்கிறது குக்கூ திரைப்படம்.

ரசிகர்களின் மாபெரும் ஆதரவுடன் ரிலீஸான 4 நாட்களில் ஐந்தரை கோடி வசூல் செய்திருக்கும் குக்கூ திரைப்படத்தின் படக்குழுவினர் நேற்று(26.03.14) பத்திரிக்கையாளர்களை சந்தித்து தங்களது நன்றியை ரசிகர்களுக்கு தெரிவித்தனர். இந்நிகழ்வில் பேசிய குக்கூ திரைப்படத்தின் இயக்குனர் ராஜுமுருகன் “குக்கூ திரைப்படத்தை வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும் நன்றி. குக்கூ திரைப்படம் உருவானதில் முக்கிய பங்கு இயக்குனர் ஷங்கருக்கு உண்டு. அவரிடம் நான் முதலில் ஒரு கதை சொன்னேன். வேறு கதை இருந்தால் சொல்லுங்கள் என்று அவர் கேட்ட பிறகு குக்கூ திரைப்படத்தின் கதையை சொன்னேன். அப்போது அவர் ’இது தான் உங்களது முதல் படமாக இருக்கவேண்டும்’ என்று கூறினார். சூழ்நிலை காரணமாக ஷங்கரால் இந்த படத்தை தயாரிக்கமுடியாமல் போய்விட்டது.

பாலா, லிங்குசாமி உட்பட பல இயக்குனர்கள் குக்கூ திரைப்படத்தைப் பாராட்டினார்கள்” என்றார். குக்கூ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் FOX STAR STUDIOS and THE NEXT BIG FILM இணைந்து கார் ஒன்றையும் ராஜுமுருகனுக்கு பரிசளித்திருக்கிறார்கள்.

nakkheeran

0 comments :

Post a Comment

 
Toggle Footer