Saturday, March 29, 2014

விஸ்வரூபம் -2, உத்தமவில்லன் மற்றும் த்ரிஷ்யம் என படங்கள் கைவசம் இருப்பதால் படு வேகத்தில் இருக்கிறார் உலகநாயகன்.

தற்போது 'விஸ்வரூபம்-2' வின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகிறது. அதேபோன்று 'உத்தமவில்லன்' படப்பிடிப்பை வேகமாக எடுத்துமுடிக்க பரபரப்பாக வேலைகள் நடந்து வருகிறது.

இதற்காக 3மாத கால்ஷீட்டை மொத்தமாக கொடுத்துவிட்டாராம் கமல்.

இந்த வேகத்திற்குக் காரணம், 'உத்தமவில்லன்' படத்தை முடித்ததும் 'த்ரிஷ்யம்' தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதுதான்.

உத்தமவில்லன் படத்தைப்போலவே த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கின் படப்பிடிப்பையும் விரைவாக முடிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம். இதற்கிடையில் 'விஸ்வரூபம்-2' படத்தின் கிராபிக்ஸ் வேலைகளையும் கவனமாக நடத்திவருகிறார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer