Monday, March 24, 2014

கொமடி நடிகராக அறிமுகமாகி கொஞ்ச காலத்தில் தன் மார்கெட்டை இமயமலை உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளார் சந்தானம்.

தொலைக்காட்சி வாயிலாக அறிமுகமானவராக இருந்தாலும் இவருக்கு இப்பொழுது ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம்.

இவரது கால்ஷீட்டிற்காக இயக்குனர்கள் மட்டும் இல்லாமல் பல ஹீரோக்களும்கூட காத்திருக்கிறார்களாம்.

கொமடி நடிகராக இருந்தபோதே அப்படி என்றால் தற்போது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார் சந்தானம்.

இப்படத்தை பற்றி அவர் கூறுகையில், இந்த படத்தில் ஒரு கொமடியன் தான் ஹீரோவாக நடிக்க முடியும், அப்பாவியாகவும் இருக்கவேண்டும் திடீரென ஹீரோயிசம் காட்டி கை தட்டல்களையும் அல்லவேண்டும் என்றுள்ளார்.

மேலும் இப்படத்திற்காக ஸ்கிரிப்டில் ஆரம்பித்து ஜிம் போகுறது வரை ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளதாக கூறியிருக்கிறார்.

மேலும் பல சுவாரசியமான விஷயத்தை இப்படத்தில் சேர்த்துள்ளதாகவும் படம் வரும்பொழுது அது தெரியும் என கூறியிருக்கிறார் சந்தானம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer