Monday, March 31, 2014

நடிகை ஊர்வசி கட்டுமான தொழில் அதிபரை திருமணம் செய்துகொண்டதாக மலையாள பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி, இதுவரை மலையாளம், தமிழ் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

ஊர்வசிக்கும், மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தேஜா லட்சுமி என்ற மகள் இருக்கிறார்.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2008 இல் விவாகரத்து பெற்று கொண்டனர். மனோஜ் கே.ஜெயன், ஆஷா என்ற பெண்ணை மணந்து கொண்டார் , மகள் தேஜா லட்சுமி மனோஜ் கே.ஜெயனிடம் வளர்கிறார்.

இந்நிலையில் ஊர்வசி கட்டுமான தொழில் அதிபர் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக மலையாள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer