Monday, March 31, 2014

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய சரவணன், அடுத்தப்படியாக அதிரடி ஆக்ஷ்ன் கலந்த காதல கதையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.

சென்னையின் ஒரு பகுதியை மையமாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு மீண்டும் ஜெய்க்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தப்படத்திற்காக ஜெய்யின் தோற்றத்தில் நிறைய மாற்றம் செய்ய இருக்கிறார் சரவணன்.

இதுவரை தான் இயக்கிய படங்களில் இல்லாத அளவுக்கு காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தை இயக்குகிறாராம் சரணவன். சூதுகவ்வும் ஒளிப்பதிவாளர் தினேஷ், இசையமைப்பாளர் இமான், ஆர்ட் டைரக்டர் ராஜா மோகன் ஆகியோருடன் புதிய கூட்டணி அமைத்து களம் இறங்குகிறார். இப்போதைக்கு 3 ஹீரோயின் இடம் பேசி வருகிறார். எஸ்.கே.ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர். ஏப்ரலில் ஷூட்டிங் ஆரம்பமாகிறது.

cinema.dinamalar

0 comments :

Post a Comment

 
Toggle Footer