Thursday, March 27, 2014

கவுதம் - அஜீத் இணையும் படம் எப்போது துவங்கும் என்கிற ஆசை உலகம் முழுவதுமிருக்கிற அஜீத் ரசிகர்களின் மனசில் ஆறாக பெருகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நல்ல செய்தியை சொல்வதற்கு நாள் குறிப்பதற்கு முன், படத்தின் நாயகிகளை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் கவுதம். இந்த விஷயத்தில்தான் இழுபறியாம். ஏன்?

கடந்த பல மாதங்களாகவே கவுதமுக்கு ஒரு கரிசனம் வந்திருக்கிறது த்ரிஷா மீது. விண்ணை தாண்டி வருவாயா சென்ட்டிமென்ட்டாக இருக்கலாம். தனது அடுத்த படத்தில் த்ரிஷாவும் வேண்டும் என்று நினைக்கிறார் அவர். சூர்யாவுடன் அவர் சேரவிருந்த படத்திற்கே த்ரிஷாவை ஜோடியாக்கலாம் என்று நினைத்திருந்தார். அவரது ஆசையில் சூர்யா போட்டது ஒரு கூடை மண் அல்ல, ரெண்டு கூடை. அதில் ஒரு கூடை த்ரிஷாவுக்குமானது.

தற்போது அஜீத் நடிக்கவிருக்கும் படத்திற்கும் த்ரிஷாவை சிபாரிசு செய்தாராம் அவர். கதைப்படி படத்திற்கு இரண்டு ஹீரோயின்கள். அதில் ஒருவராக அனுஷ்கா தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அந்த மற்றொரு ஹீரோயினுக்குதான் இவரை சிபாரிசு செய்தாராம் கவுதம். ஆனால் அஜீத்தின் எண்ணமோ வேறாக இருக்கிறதாம். த்ரிஷாவுடன் இணைந்த ஜி என்ற படமும் சரி, கிரீடம் படமும் சரி. தனது மார்க்கெட்டில் பள்ளம்தான் பறித்தது. ரொம்பவே ஸ்டடியாகவும் வேகமாகவும் ஓடிக் கொண்டிருக்கும் இந்த மார்க்கெட் குதிரையின் மீது மறுபடியும் த்ரிஷாவை ஏற்றி குதிரையே குப்புற விழுந்துவிட்டால்? இந்த ஒரே காரணத்திற்காக த்ரிஷாவை மறுத்த அஜீத் தரப்பு, ‘எமியிடம் பேசுங்க’ என்கிறார்களாம்.

மதராசப்பட்டினம், ஐ என்று தமிழ் படவுலகில் தளதள தங்க பொம்மையாக மின்னி வரும் எமிக்கு இந்த அழைப்பு கசக்கவா போகிறது?

newtamilcinema

0 comments :

Post a Comment

 
Toggle Footer