Monday, March 31, 2014

ஆந்திராவில் தொண்டர்களிடையே நடந்த தாக்குதலால் நடிகை ரோஜா காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.

ஆந்திராவில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 10 மாநகராட்சி, 145 நகர சபைக்கு கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்ததில் மொத்தம் 89.45 சதவீத் வாக்குகள் பதிவானது.

இந்நிலையில் வாக்குப்பதிவின் போது காங்கிரஸ்–ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி இடையே பயங்கர மோதலால் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரின் மகன் முரளி காங்கிரஸ் தொண்டர்களால் தாக்கப்பட்டார்.

மேலும் முரளியை முன்னாள் அமைச்சர் சென்னா ரெட்டியின் ஆதரவாளர் சிரஞ்சீவி என்பவர் தாக்கியுள்ளார்.

இதை கேள்விப்பட்ட ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நடிகை ரோஜா தொண்டர்களுடன் காவல் நிலையத்தில் வந்து முரளியை தாக்கிய சிரஞ்சிவியை கைது செய்யக் கோரி பொலிசாரிடம் வற்புறுத்தியுள்ளார்.

இதனையடுத்து பொலிசார் வேறு வழியின்றி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து நடிகை ரோஜா கூறுகையில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசை அழிக்க நினைக்கும் சிலருக்கு அவர்களது பாட்டனார் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது என்றும் வரும் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer