Monday, March 31, 2014

அசினும் நயன்தாராவும் கஜினி படத்தில் நடித்தார்கள் அல்லவா? இது அப்போது நடந்த பிளாஷ்பேக்.

எக்மோர் ரயில்வே நிலையத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. படத்தின் ஹீரோயினான அசினிடம், இந்த படத்தில் நயன்தாராவுக்கும் ஒரு பாடல் இருக்கு என்று கேஷுவலாக கூறிவிட்டார் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். அதுவரை நன்றாக பேசிக் கொண்டிருந்த அசின், சட்டென்று முகம் மாறிவிட்டார். உடனே எழுந்து சென்று கேரவேனுக்குள் புகுந்து கொண்டார்.

நேரம் போய் கொண்டேயிருக்க, அவர் உள்ளேயிருந்து வெளியே வரவேயில்லை. கேட்டால், எனக்கு திடீர்னு வயிற்றுவலி என்று சால்ஜாப்பு சொல்ல, படுபயங்கர கோபம் முருகதாசுக்கு. வர்றாங்களா, இல்லையான்னு கேளு. இல்லேன்னா பேக்கப் என்று ஆவேசமாக மைக்கில் கத்த, அதற்கப்புறம்தான் மெல்ல கேரவேன் கதவை திறந்து கொண்டு இறங்கினார் அசின். அதற்கப்புறம் அந்த காட்சியை தனது உதவி இயக்குனரை விட்டு படமாக்க சொல்லிவிட்டு விர்ரென்று காரில் ஏறி பறந்துவிட்டார் அவர்.

சரி, இப்போது எதற்கு அந்த பிளாஷ்பேக்?

விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் கத்தி படப்பிடிப்பிற்கு சமந்தா தாமதமாக வந்து சேர்ந்தாராம். அதுவும் அரை நாள் தாமதமாக. இதில் கடும் கோபத்திற்கு ஆளான முருகதாஸ், கொளுத்தும் வெயிலில் அவரை நிற்க வைத்து காட்சிகளை எடுத்தாராம். தாங்கவே முடியாமல் தனது ட்விட்டரில் புலம்பி தீர்த்துவிட்டார் சமந்தா. அந்த கடவுள்தான் என்னை காப்பாத்தணும் என்று அவர் குறிப்பிட்டிருப்பது வெயிலிடமிருந்தா, முருகதாசிடமிருந்தா என்பதுதான் கேள்வி?

4tamilmedia

0 comments :

Post a Comment

 
Toggle Footer