Sunday, March 30, 2014

வடிவேலுவின் தெனாலிராமன் ரீலிஸ் திகதி மாற்றப்பட்டுள்ளது.<!--more-->

வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்துள்ள ‘தெனாலி ராமன்’ படத்தின் டிரைலர் நேற்று வெளியானதை தொடர்ந்து படத்தின் இசை ஏப்ரல் 1ம் திகதி வெளியாக இருக்கிறது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 11ம் திகதி இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார்கள்.

Tenali Raman - Official Theatrical Trailer

ஆனால் படத்தின் ரிலீஸை இப்போது ஏப்ரல் 18-க்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.

ஏப்ரல் 11ம் திகதி தான் விஷால் நடித்துள்ள ‘நான் சிகப்பு மனிதன்’ படமும் ரிலீசாகிறது! பிரம்மாண்டமான முறையில் தயாராகியுள்ள இப்படமும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருப்பதால், இரண்டு பெரிய படங்களும் ஒரே நாளில் வெளியாகி மோதினால் அது வசூலை பெரிய அளவில் பாதிக்கும் என்பதால் தான் ‘தெனாலிராமன்’ படத்தின் ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer