Wednesday, March 26, 2014

ஜெயம் ராஜா இயக்கவிருக்கும் புதிய படம் ஒன்றில் வழக்கம் போல அவரது தம்பி ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். நியூஸ் வேல்யூ இது அல்ல.

இந்த படத்தில் ரவிக்கு ஜோடியாக நடிப்பது நயன்தாரா. வரவர சின்னப் பசங்களுடன் ஜோடி சேர்ந்து கொண்டிருக்கும் நயன்தாரா, விட்டால் ஜி.வி.பிரகாஷ், கௌதம் கார்த்திக் ஆகியோருடன் நடிக்க கேட்டால் உடனே கால்ஷீட்டை அள்ளி வழங்கிவிடுவார் போலிருக்கிறது.

இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்ததற்கு ஜென்ம சாபல்யம் அடைந்தது போலவே சந்தோஷப்பட்டார் ஜெயம் ரவி. எனக்கு பல வருஷமாகவே நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்கணும்னு ஆசை இருந்துச்சு. ஆனால் வெவ்வேறு காரணங்களால் அது முடியல. இப்பதான் கை கூடியிருக்கு. ரொம்ப டெடிக்கேட்டிவ்வான நடிகை அவங்க. ரொம்ப எளிமையா பழகுவாங்க. ஷுட்டிங் ஸ்பாட்ல அவ்வளவு ஆர்வமாக வேலை பார்ப்பாங்க என்றெல்லாம் அளந்து தள்ளினார்.

நயன்தாரா த்ரிஷாவெல்லாம் ஒரு கால கட்டத்தில் அறிமுகமானவர்கள். த்ரிஷா கூட ஃபேட் அவுட் ஆகிவிட்ட சூழ்நிலையில் நயன்தாராவின் இந்த டிமாண்ட் மற்றும் அவர் வாங்கும் சம்பளம் அவரை ஒரு பெண் ரஜினியாகவே காட்டுகிறது. சூப்பர் ஸ்டார் என்பது எப்படி ஒரு எட்டாத உயரத்திற்கான பட்டமோ, அப்படியொரு பட்டத்தை நயன்தாராவுக்கும் கொடுப்பதுதான் பொருத்தம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer